பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை விட சுவீடனில் தனிநபர் தொற்று விகிதம் அதிகரித்துள்ளது.

1 week

தொற்றுநோய்க்கான ஹேர்ட் நோய் எதிர்ப்பு அணுகுமுறையைக்காக (herd immunity) முடக்கநிலையை தவிர்த்த சுவீடன் தற்போது பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் விடவும் அதிகளவான நோய் தொற்று விகிதத்;தை கொண்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்ப்பாகிக்கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று ஆரம்பமானதில் இருந்து 208295 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 6406 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

என்றாம் பிரித்தானியா ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளையும் விட குறைவானது என்றாலும் தனிநபர் தொற்று வீதம் சுவீடனில் குறித்த மூன்று நாடுகளையும் விடவும் அதிகரித்துள்ளது.

ஒரு மில்லியனுக்கு 393 என்ற விகிதத்தில் சுவீடனில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் முறையே 337 மற்றும் 324 ஆக காணப்படுகின்றது.

நோர்வேயை விடவும் சுவீடனில் தொற்று அதிகம்.முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்றவற்றுக்கு மன்னிப்பு இல்லை என ஸ்டொக்Nhஹால்ட் பொதுசுகாதார             நிலைய அதிகாரி கரின் டெக் மார்க் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இரண்டாம் அலைக்கு தயார்ப்படுத்தல் அற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாக சுவீடனின் முன்னாள் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொற்றாளர்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில் எட்டு மாத்திரமே ஒன்றுகூட முடியும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்டீபன் லொப்வன் அறிவித்துள்ளார்.

ஜிம்கள் நூலகங்கள் போன்றவற்றுக்கு செல்வதை சுவீடன் மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து விருந்துபசாரங்களையும் இரத்து செய்யுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது முழு சமூகத்துக்குமான புதிய விதிமுறை என்றும் தொற்றை தடுக்க அனைவரும் தத்தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Read next: பைஸர் தடுப்பு மருந்து நிறுவனம் தனக்கெதிரா செயல்பட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டு