அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்! இந்தியர்கள் உட்பட பலர் பலி

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் மூன்று எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரோன் விமானங்களின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபியில் ட்ரோன் விமானம் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 எரிபொருள் தாங்கிகள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அபுதாபி போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் இருவர் இந்திய பிரஜைகள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
Read next: விடுதியின் 7வது மாடியில் இருந்து குதித்து ஐஐடி மாணவர் தற்கொலை!