சூப்பர் மெலடி... சூர்யாவின் அடுத்த பாடலை வெளியிட்டது படக்குழு... செம மாஸ்

Jul 19, 2021 09:40 pm


மணிரத்னத்தின் முயற்சியில் நவரசா ஆந்தாலஜி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது இயக்குநர்களின் கைவண்ணத்தில் படங்கள் உருவாகியுள்ளன. கௌதம் மேனன், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த ஆந்தாலஜி வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இதையடுத்து பிரமோஷன் பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சூர்யா, அதர்வா, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடித்துள்ள கிடார் கம்பி மேலே நின்று படத்தில் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தூரிகா மற்றும் அலைஅலையாக என்ற அந்த இரு பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இந்த படத்தில் சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் படத்தின் 3வது நானும் என்ற பாடல் இன்றைய தினம் 5 மணியளவில் வெளியானது. கார்த்திக் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை அமைத்துள்ளார். கடந்த இரு பாடல்களும் மெலடியாகவே இருந்த நிலையில் இந்த பாடலும் காதல் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்துகிறது.