கடினமான கதாபாத்திரத்தை இலகுவாக நடிப்பவர் - சுஜா சூர்ய நிலா

Jul 21, 2021 08:36 pm

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. மரங்கள் எல்லாம் இலைகளாக மிதந்து வந்து கொண்டிருந்தது. அந்த புயல் வெள்ளத்தில் சுராமீனைப் போல் ஒரு உயிருள்ள மீனை வாயில் கவ்வியபடி வேகமாக துடித்து எழுந்து வந்தாள் சுஜா சூர்ய நிலா. இப்படி ஒரு காட்சிஅமையா என்ற திரைப்படத்தில் வருகிறது. அந்த காட்சியை படமாக்கும்போது விஜய சூர்ய நிலாவின் துடிப்பான நடிப்பைப் பார்த்து மொத்த படப்பிடிப்பு களமே உரைந்து போயிருந்தது.  ஜான்சி ராணிவேலுநாட்சியார் போன்ற கதாபாத்திரங்கள் கொடுத்தால் கூட அசால்டாக நடிக்கும் அசாத்திய நடிகை நான் என்பதை சுஜா சூர்ய நிலா நிறுபித்தபடி துள்ளி நடந்து வருகிறார்.

 

பேஸ் ஆப் சென்னை -2015, மிஸ் மெட்ராஸ் 2016, மிஸ் கர்நாடகா 2016,  மிஸ் இண்டியா 2017  உள்ளிட்ட விருதுகளை பெற்ற விஜய சூர்ய நிலா தற்போது வெப் சீரியலில் நடித்து வருகிறார். காஞ்சனா -3ல் முக்கிய கதாபாத்திரத்திலும்  அமையாவில் கதா நாயகியாகவும் நடித்துள்ளார். 

சுஜா சூர்ய நிலா கூறுகையில்,  

 

என்னுடைய கனவு  மாடலிங், நடிகை ஆவது என்னுடைய கனவை எனது பெற்றோரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் எங்களுடைய ஆசை நிறை இன் ஜினியரிங்க் படிக்க வேண்டும் என்றார்கள்.  அதை நிறைவேற்றும்படி கூறினார்கள். அது நியாயமாக இருந்தது. நான் என்னுடைய பெற்றோரின்  விருப்பத்தின்படி என் ஐடியில் இன்ஜினியரிங் படித்தேன். படித்து முடித்ததும் என்னுடைய பெற்றோரிடம் வந்து என்னுடைய கனவு எல்லாம் மாடல் ஆகவேண்டும். நடிகை ஆக வேண்டும் என்றேன்.   எனது பெற்றோர் அதற்கு பச்சைக்கொடி காட்டினர். என்னுடைய குடும்ப  பின்னணியில் யாரும் சினிமாவில் இல்லை என்பதால் மாடலிங்துறைக்கு வரவும் சினிமாவிற்குள் நுழையவும் மிகவும் போராடவேண்டியிருந்தது. வாய்ப்பை தருகின்ற சரியான நபரை தேர்வு செய்வதே போராட்டமாக இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வாய்ப்பை பெற்றேன்.  என்னுடைய தந்தை இன்ஜினியராக இருந்ததால் நாங்கள் பல்வேறு மாநிலங்களில்  வாழ வேண்டியிருந்தது. எனக்கு தமிழ், இந்தி, பெங்காலி, அசாம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். அதேபோல் நடிகையாக ஆகவேண்டும் என்பதற்காக பரதநாட்டியம், ஒடியா ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். 

முதலில் மாடலிங்க் துறையில் ஒரு மாடலாக வளம் வந்தேன். மேலோட்டாமாக பார்க்கும் போது மாடலாக வருவம் ராம் வாக்கிங் பார்ப்பதற்கு சுலபமாகத் தெரியும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை. நிறைய பயிற்சி பெறவேண்டும். ராம் வாக்கிற்காக பல முறை நடையை மாற்றி மாற்றி நடது கடினமாக பயிற்சி பெறவேண்டும். மைக்கல் ஜாக்சன் நடத்தில் ஒரு ஸ்டெப்பை ஆயிரம் முறைக்கு மேல் செய்து பார்ப்பாராம் அப்படி கடினமாக பயிற்சி பெற்றால் தான் நடையில் ஒரு நளினம் கிடைக்கும். மாடலிங்காக வர அதிகம் மெனக்கெட வேண்டும். பார்பதற்கு வேண்டுமானால் சாதாரணமாகத் தெரியும்   

 

ஒவ்வொரு துறைக்கான டிரஸ் கோட், கேரக்டர் உள்ளது. உதாரணமாக சர்வர் எப்படி இருக்க வேண்டும். இன் ஜினியர் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும். டாக்டர் டிரஸ் கோட் என்ன? நர்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வருக்கும் ஒரு டிரஸ் கோட் உள்ளது. அதேபோல் தான்  மாடலிங்கிலும்.  கிளாமராக இருப்பதுதான் மாடலிங்கி துறையின் அடிப்படை அம்சம். அதை கலைப்பூர்வமாக பார்க்கவும் அனுகவும் தெரிந்தவர்களுக்குத்தான் அதன் அழகு தெரியும். அது பார்க்கும் பார்வையை பொருத்தது. மிக்ஸியை கையில் வைத்திருக்கும் பெண்ணை பார்த்துவிட்டுத்தான் மிக்ஸி விளம்பரத்தைப் பார்ப்பார்கள். இது இயற்கையான விஷயம் அதை விட்டு விட்டு அதை தவறான கண்ணோட்டத்தோடு அனுகினால் தவறாகத்தான் தெரியும். அழகு, இளமை, கவர்ச்சி இதுதான் மாடலிங்கின் அடிப்படை. குழந்தையின் சிரிப்பு. நதியின் ஓட்டமும் மலரின் மலர்ச்சியும் கூட கவர்ச்சியான விஷயங்கள் தான்.  

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது. அந்த நேரத்தை  எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நம் கையில் தான் உள்ளது. ஜனாதிபதிக்கும் சாமான்யனுக்கும் ஒரே 24 மணி நேரம் தான். அந்த நேரத்தில் நமது இலக்கை அடைவதற்கு என்னென்ன  பயிற்சிகள் எடுக்கலாம் முயற்சிகள் எடுக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானது.

 

Read next: கனடிய பிரதமரின் வெற்றியினை தடுக்கும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளி தலைவர்