புகையிரத்துடன் மோதி மாணவன் உயிரிழப்பு!

Jan 25, 2022 11:50 am

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்துடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவம்  நேற்று மாலை 6.15 மணியளவில் நடைபெற்றது. 

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் எனும் 18 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் புகையிரத பாதையினை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளான். 

குறித்த மாணவன்  பாடசாலையில் நடைபெறும் (சோர்சல்) நிகழ்வுக்கு ஆடைகளை தைக்க சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read next: குடியரசு தின விழா,மத்திய பிரதேசத்தில் 215 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!