இலங்கை அகதிகளுக்கு அடித்தது அதிஷ்டம்! மகிழ்ச்சியான தகவல் இதோ....

Jul 24, 2021 08:57 am

தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார். 

அப்போது, “தலைநிமிரும் தமிழகம்” என்ற திட்டப்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்துள்ளார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும்.

2 மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்து உள்ளனர். 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

Read next: சிட்னியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பலர் அதிரடி கைது