பிரித்தானியாவை உலுக்கிய ஈழத் தமிழர்களின் மரணம்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Nov 25, 2021 02:56 pm

பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் இலங்கையை பூர்வீகமாக கொண்டவ நால்வரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ஆம் திகதி இரவு 08.30 மணியளவில்  தென் கிழக்கு லண்டனின் பெக்ஸ்லிஹீத் நகரில் வீடொன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த தீ விபத்தில் உயிர் தப்புவதற்கு இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்தவரின் நிலைமை தொடர்பிலும், விசாரணையின் பின்னரான முதற்கட்ட தகவல்கள் தொடர்பிலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கீழே குதித்த போது ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனினும் அவர் இன்னமும் சிகிச்சைக்குட்படுத்தும் கட்டத்திலேயே உள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எங்கள் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Read next: லண்டன் இளைஞன் கொலை – விசாரணைகள் ஆரம்பம்