பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பத்தில் அதிர்ச்சி சம்பவம்! கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இருவர்

Aug 11, 2021 03:00 pm

பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான பெண்மணியும், 21 வயதான யுவதியும், கழுத்து அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத்தலைவர் தனது மனைவியும் மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டும் குத்தப்பட்ட காயங்களுடன் சடலங்களாக கிடப்பதை கண்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு கூரிய கத்தி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. 

இந்த குருர சம்பவத்திலும் கொலையாளி இந்த குடும்பத்திற்குள் இருப்பதற்கான சாத்தியங்களை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகள் குறிப்பிடுகின்றன.

ஆயினும் இந்த கட்டத்தில் இதுகுறித்த திடமான அனுமானங்களை வெளியிடுவதற்கு காவற்துறை விரும்பவில்லை. 

Read next: இதுவரை சுமார் 870 லட்சம் தடுப்பு மருந்துகளை செலுத்தி உள்ள பிரித்தானியா