இலங்கையின் ஆயுதக்குழு - தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

Jun 14, 2021 10:01 am

இலங்கையில் இருந்து ஆயுதக்குழு ஒன்று இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்ததை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக பொலிஸார் மற்றும் அந்நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஆயுதமேந்திய குழு ஒன்று இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததாக இந்தியாவின் மத்திய புலனாய்வு பிரிவு கடந்த சனிக்கிழமை பிற்பகல் எச்சரிக்கை விடுத்துள்ளதிருந்தது. 

அதனடிப்படையில் கன்னியாகுமாரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆயுதமேந்திய குழு ஒன்று படகு மூலம் ராமேஸ்வரம் கடற்கரை நோக்கி பயணித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இருப்பினும், இவர்கள் யார் எந்த அமைப்பு என உறுதிப்படுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read next: எம்.வீ எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது .