அடுத்த வாரம் முற்றாக முடங்கும் இலங்கை!

Jul 03, 2022 11:28 am

இலங்கை அடுத்த வாரம் முற்றாக முடங்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

அரசாகத்தின் தரப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும் முடங்கும் நிலைமை உருவாகியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்குகூட போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இல்லாததன் காரணமாகவே, நாடு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் முடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜுலை 10 ஆம் திகதிவரை நாட்டில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகித்துவருகின்றது.

அடுத்த எரிபொருள் கப்பல் எப்போது வருமென உறுதியாக தெரியவில்லை, இந்நிலையிலேயே நாடு முடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read next: சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 51 பேர் இலங்கை கடற்படையினரால் கைது