கென்யா - நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Aug 26, 2021 07:02 am

கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் கொவிட்-19 நிதியத்திற்கு தமது ஒகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கொவிட்-19 நிதியத்திற்கு ஒகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் முன்மொழிவைப் பின்பற்றி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

Read next: தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் பணவீக்கம் அதிகரிப்பு