இங்கிலாந்தின் கொரோனா பயண-பாதுகாப்பான நாடுகளுகளின் பட்டியலில் இலங்கை

1 week

இஸ்ரேல் உருகுவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இங்கிலாந்தின் பாதுகாப்பான பயண நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகள் உட்பட நமீபீயா ருவாண்டா பொனயர் சென்.எஸ்டாடியஸ்  என்ட் சபா வட மரியானா தீவு மற்றும் அமெரிக்காவின் வேர்ஜின் தீவுகளிலிருந்து இங்கிலாந்துக்கு வருகை தருபவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதேவேளை பாதுகாப்பு பட்டியலில் இருந்து இவ்வாரம் எந்த ஒரு நாடும் நீக்கப்படவில்லை என இங்கிலாந்து போக்குவரத்து திணைக்கள செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

 

Read next: கிராம மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் 4ஜீ வசதி