ஐ.பி.எல் தொடரில் விளையாடும் டி. நடராஜனுக்கு கொரோனா உறுதி

Sep 22, 2021 12:20 pm

2021 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் டி. நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. 

நேற்றுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள டி. நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது பிரித்தானியா