அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி இயக்கம் மற்றும் மெரிடியன் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!

Sep 14, 2021 12:58 pm

அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி இயக்கம் மற்றும் மெரிடியன் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி இயக்கம் மற்றும் மெரிடியன் மருத்துவமனை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சென்னை வில்லிவாகத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது..

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம்,கண், மகப்பேறு,எலும்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மெரிடியன் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் ரத்த பரிசோதனை, எலும்பு தாது பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைக்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

மருத்துவ முகாமிற்கு சிறப்பு விருந்தினார்களாக வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் சகாதேவன்,ஆர். எஸ். ஆர். எம். மருத்துவமனையின் மருத்துவர், மெரிடியன் மருத்துவமனையின் இயக்குனர் ஜானகிராமன், இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி இயக்கத்தின் தலைவர் வண்ணை ரவி மற்றும் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read next: கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும்!