பால்கன் 9 ராக்கெட்டில் 53 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

May 14, 2022 10:34 am

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 53 செயற்கை கோள்களை  பால்கள் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது.

கலிபோர்னியாவின் வாண்டன்பார்க் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 7 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டின் முதற்கட்டம் பசுபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தரையிறங்கியது. இரண்டாம் பாகம் வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.

இதேபோல் மற்றுமொரு பால்கன் 9 ராக்கெட் மூலம் 53க்கு மேற்பட்ட செயற்கைகோள்களை புளோரிடாவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி சனி மாலை 4.33 மணிக்கு விண்ணில் ஏவப்படும்.

  

Read next: இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்