முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் கொரியாவில் ஆபத்து அதிகரிப்பு

Jul 22, 2021 05:55 am

தென் கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று புதிதாக 1,784 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வேகமாகப் பரவும் டெல்டா வகை வைரஸால் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாகத் தென் கொரிய நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு அமைப்பு கூறியது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகமானோரிடம் நடத்தப்பட்ட மரபணுச் சோதனையில் 40 வீதத்தினரிடம் டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

கடந்த டிசம்பரிலிருந்து கண்டறியப்பட்ட மொத்தம் 1,741 டெல்டா வகைக் வைரஸ் தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கும் மேல் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டன. 

தென் கொரியாவில் 52 மில்லியன் மக்கள் தொகையில் 32 வீதத்தினர் ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

செப்டம்பருக்குள் அந்த எண்ணிக்கையை 70 வீதத்திற்கு உயர்த்த தென் கொரிய அரசாங்கம் திட்டமிடுகிறது.


Read next: +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !