ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை மீள கேட்கும் தென்னாப்பிரிக்கர்கள்

Sep 21, 2022 01:29 am

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா அல்லது குல்லினன் 1 என்று அழைக்கப்படும் இந்த வைரமானது தென்னாப்பிரிக்காவில் 1905ல் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தென்னாப்பிரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வைரம் மட்டுமல்ல, மிகவும் மதிப்புமிக்க வைரமும் கூட. காலனித்துவ காலத்தில், காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்த வைரத்தை பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கினர். 

அதன்படி கிரீடத்தில் வைரம் இணைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆர்வலர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். வைரத்தை திருப்பித் தருமாறும் அதற்கு பதிலாக தென்னாப்பிரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். 

இதன்படி, ராணியின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் குல்லினன் 1 வைரத்தை மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் கிடைத்த மற்ற வைரங்களையும் திரும்பப் பெற விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இது குறித்து African Transformation Movement (ATM) இன் அரசியல்வாதி Vuyo Zungula கருத்து தெரிவிக்கையில், 

தென்னாப்பிரிக்கா காமன்வெல்த்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், பிரிட்டன் செய்த அனைத்து தீங்குகளுக்கும் இழப்பீடு கோர வேண்டும் என்றும் பிரிட்டனால் திருடப்பட்ட தங்கம், வைரங்கள் அனைத்தையும் திரும்பக் கோர வேண்டும் என்றும் கூறினார்.

Read next: பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்த ஜனாதிபதி ரணில்