இலங்கையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்!

Aug 10, 2021 04:08 pm

மட்டக்களப்பு – செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்ற (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 65 வயதான தாயின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதில் 40 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாளை (11) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Read next: முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும் பாடசாலை நிர்வாகத்தினரின் ஊதியம் நிறுத்தப்படும்.