போலிச் செய்தி: சமூக வலைத்தளங்கள் கொள்கைக்கு பதிலாக பணம் ஈட்டுவதை முன்னிலைப்படுத்துகின்றன- சிங்கப்பூர் அமைச்சர்

Jan 12, 2021 10:17 pm

Photo Credit: K Shanmugam

போலிச் செய்திகளை கையாளும் போது சமூக வலைத்தளங்கள்;;; தமது வர்த்தக இலாபத்தை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொய்யான தகவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.இது கருத்து சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகத்தின் லைக்ஸ் தெரிவு தணிக்கை கருவியாக உள்ளது முதல் செயற்பாட்டு குழுவினர் மற்றும் ஏனைய அரசியல லாபங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கு எதிரான நகரத்தின் புதிய சட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள பயனாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கில் பல வியாபார ரீதியிலான பொய்யான தகவல்கள் பகிரப்படுவதாகவும் அதனை தடுக்க இந்த சட்டம் அவசியம் என்றும் சிங்கப்பூர் நீதி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அமெரி;க்க தேர்தல் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரப்பவதாக அமெரிக்க சட்டவல்லுநர்கள் தெரிவித்திருந்ததை அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக கடந்த வாரம் இடம்பெற்ற கெப்பிட்டல் தாக்குதல் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையதளங்களில் தகவல் ஒன்றை வெளியிடுவதற்கு முறையொன்று உள்ளது.இது கருத்து சுதந்திரம்.அதற்காக எந்த ஒரு ஒழுங்கு முறையும் இருக்கக்கூடாதுஎன சிங்கப்பூர் உள்விவகார மற்றும் நீதி அமைச்சர் ஷன்முகம் தெரிவித்துள்ளார்.

ஷன்முகம்  -

வெளிப்படையாக இருப்போம்.ஒழுங்குமுறைக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் செயற்பட்டால் அது உண்மையில் கொள்கைக்கு அப்பால் உள்ள இலாபம்

இந்த நிலையில் சிங்கப்பூரின் ஒழுங்கமைப்பு நடைமுறைகளை எத்தனை நாடுகள் பின்பற்றுகின்றன என்பதில் தெளிவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் இணைய போலித் தகவல்கள்   மற்றும் கையாள்தல் சட்டம் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் ஆசிய இணைய கூட்டமைப்பு மற்றும் இணைய மற்றும் தொழிநுட்ப நிறுவனங்களினால் இன்றுவரை பின்பற்றப்படுகின்றது.

பொய்யான செய்திகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட அரச எதிர்ப்பு விடயங்களை தடுக்க அமைச்சர்களால் முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக தண்டனை தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

Read next: சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன - இராணுவத்தளபதி