இலங்கையில் மாடுகளை அறுப்பதற்கு இனி தடை?

Jul 18, 2021 10:45 am

நாடு முழுவதும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாடுகளை அறுப்பது தடை செய்யப்பட்டவுள்ளது.

இதற்கான உத்தரவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வழங்கியுள்ளது.

அனைத்து பிரதேச சபைகளுக்கும், மாகாண ஆளுனர்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ள சட்டத்தில் 4 திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்திற்கும் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: நிறைவுக்கு வந்தது கேன்ஸ் திரைப்பட விருது விழா