பிரித்தானியாவில் 12-15 வயதினருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து மட்டுமே

Sep 13, 2021 09:33 pm

ஆரோக்கியமாக உள்ள 12-15 வயதினருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து மட்டும் கொடுத்தால் போதும் என்று பிரித்தானியாவின் தலைமை மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தடுப்பு மருந்து கொடுப்பதன் காரணமாக அவர்களது கல்வியில் தடங்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.

அரசாங்கத்து ஆலோசனை வழங்கும் குழு முன்னர் தெரிவிக்கையில் தெரிவிக்கையில் இவ்வாறு தடுப்பு மருந்து கொடுப்பதால் பெரிய நன்மைகள் இல்லை என்றும்இருப்பினும் அரசு மற்றைய காரணிகளை கருத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தடுப்பு மருந்து கொடுப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்க முடியும் என்றும் பிரித்தானியாவின் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு நோய் பரவுவதால் நேருக்கு நேர் கல்வி கற்றுக்கொள்வது பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய தேசங்களை கொண்ட மருத்துவ அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்து இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அந்த பிரதேசங்களில் உள்ள அரசுகளின் முடிவாகும்.

Read next: 2020 ல் உலகளவில் 227 சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உயிரிழப்பு