பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர்பகுதியில் கையெழுத்து போராட்டம்!

Jan 28, 2023 02:07 pm

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்,  தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

வடமாகாண மக்கள் திட்டவரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதில் வசந்தவுக்காக ஒரு வாக்கு மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, தமிழ்- முஸ்லிம்- சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுதலை செய் எனவும் வலியுறுத்தி கையெழுத்துப் பெறப்பட்டது.

இதில் இன, மத பேதங்களைக் கடந்து பலரும் வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.


Read next: 11 வயதில் உயிரிழந்த ஜெய்லா - முன்னாள் ஆஸ்டன் வில்லா நட்சத்திரம் உருக்கம்