கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Mar 18, 2023 07:24 pm

கொழும்பு கொட்டாஞ்சேனை, பரமானந்த மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Read next: அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்