ரஷ்ய பிடியில் இருந்து மீட்கப்பட்ட தமிழர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்!

Sep 19, 2022 02:24 pm

உக்ரைனில் ரஷ்ய படையினரின்  பிடியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களில் சிலர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

தப்பியவர்கள் வெளியிட்ட ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்டவர்களில் ஐங்கரநேசன் கணேசமூர்த்தி என்ற நபரும் காணப்படுகின்றார்.

ரஷ்ய படையினர் மதுபானம்  அருந்திவிட்டு அதன் பின்னர் கைதிகளை  அந்த பகுதியை சுத்தம்செய்யுமாறு கேட்டுக்கொண்டனர் என்னை தாக்கினார்கள் என ஐங்கரநாதன் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னை தாக்கினார்கள் ஏன் என்னை தாக்கினார்கள் என்பது தெரியாது ஒவ்வொரு நாள் காலையிலும் என்னை தாக்கினார்கள் என அவர்தெரிவித்துள்ளார்.


Read next: கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்!