மூக்கைக் கடித்துத் துப்பிய பிரபல உணவகத்தின் உயரதிகாரியால் அதிர்ச்சி!

Sep 20, 2022 04:11 pm

அமெரிக்காவில் Beyond Meat எனும் பிரபல உணவகத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, சண்டையிட்ட ஒருவரின் மூக்கைக் கடித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் கைது  செய்யப்பட்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பர்கர்கள், கோழித்துண்டு போன்ற உணவுகளுக்கு Beyond Meat பெயர்பெற்றது 

அதன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான 53 வயது டக்லஸ் ராம்சி (Douglas Ramsey) மீது கொடூரமாக அச்சுறுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அர்கான்சாஸ் மாநிலத்தின் ஃபெயட்வில்லே (Fayetteville) பகுதியில் காற்பந்து விளையாடிவிட்டு அவர் கிளம்பியபோது சம்பவம் நடந்தது. 

கார் நிறுத்துமிடத்தில் அவருக்கு அருகில் இருந்த் ஒருவருடன் சர்ச்சை ஏற்பட்டது. 

சினத்தில் ராம்சி ஆடவரின் மூக்கைக் கடித்துத் துப்பியதாகச் சொல்லப்படுகிறது.  

பாதிக்கப்பட்ட மூக்கு நுனியில் சதை  பிய்ந்து ரத்தம் கசிந்ததாய் உள்ளூர்த் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்துக் பொலிஸாராக கருத்துரைக்க மறுத்தது. 

Read next: சிங்கப்பூரில் தன்னை தானே தாக்கிக்கொண்ட பெண்ணை சுட்ட பொலிஸார்