பிரான்ஸில் திருமண மண்டபத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

Feb 02, 2023 02:38 am

பிரான்ஸ் Évry-Courcouronnes நகரில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளர்.

அங்குதுப்பாக்கியால் சுட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி ஒன்றை அண்மித்த பகுதியில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

இதன் போது, கார் ஒன்றில் வந்த நபர் ஒருவர், துப்பாக்கி ஒன்றை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இதனால் அங்கு பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனடியாக பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் ஆயுததாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மி.மீ கலிபர் துப்பாக்கியும் சில துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read next: ஜெர்மனியில் இருந்து இலங்கை சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் - நெகிழ வைத்த மக்கள்