இலங்கையில் அதிர்ச்சி - படங்களை அனுப்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Mar 14, 2023 01:31 am

Þதிருகோணமலை – பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உத்தியோகத்தர் ஒருவரின் நிர்வாணப்படங்களை கொண்டு நபர் ஒருவர் பாரிய அளவில் கொள்ளையடித்துள்ளார்.

குறித்த படங்களை பெண்ணின் கணவரின் கைத்தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்களுக்கு அனுப்புவதாக மிரட்டி, பல்வேறு கட்டங்களில் 26 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை பெற்ற சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முறைப்பாட்டாளரான அரச உத்தியோகத்தர், குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் முறைசாரா உறவைப் பேணி வந்துள்ளதாகவும், அதன்போது, அந்த அரச உத்தியோகத்தரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டிலிருந்து, சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில், பணத்தொகையை அவர் வழங்கிய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு அரச உத்தியோகத்தரை மிரட்டியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தநிலையில், சம்பவம் குறித்து சிறிபுர காவல்நிலையத்தில் அரச உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துசெய்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read next: உக்ரைனில் பரிதாப நிலைமை - புதிய பிரச்சினையால் அச்சத்தில் அரசாங்கம்