இலங்கையில் மீண்டும் அதிர்ச்சி - காதலனுக்கு காதலி செய்த செயல்

Jan 21, 2023 12:31 am

காலியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி – அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசியில் தொடர்புகொண்டு இளைஞரை மிதிகமவிற்கு அழைத்த குறித்த பெண், அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மஹரகம பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபரான பெண் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

24 வயதான இளைஞர் கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read next: ஜெர்மனியில் இதுவரையில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்