சோம வார சிவ தரிசனம்

Jan 23, 2023 04:07 am

காலை தரிசனம்.. சோம வார சிவ தரிசனம்..

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்..!

நாயின் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டு இருக்கும்...!

அது அன்றி ஆயக் கடவேன் நானோ தான் என்னதோ ...

இங்கு அதிகாரம் காயத்து இடுவாய் உன்னுடைய கழல்கீழ் வைப்பாய் கண் நுதலே..!!

சுப கிருது வருடம் : 

தை மாதம் 09 ஆம் நாள் !

ஜனவரி மாதம் : 23 ஆம் தேதி !

(23-01-2023)

திங்கட்கிழமை !

சூரிய உதயம் : 

காலை : 06-47 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :

மாலை : 06-17 மணி அளவில் !

இன்றைய திதி : வளர்பிறை :

துவிதியை !

துவிதியை..

இரவு 11-00 மணி வரை ! அதன் பிறகு  திரிதியை !!

இன்றைய நட்சத்திரம் : 

அவிட்டம்..

பின் இரவு 04-45 மணி வரை அதன் பிறகு சதயம் !!  

யோகம் : 

சித்தயோகம் !!

இன்று

மேல் நோக்கு நாள் !

இன்று

மாலை 05-45 மணிவரை மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் !

பிறகு கடக ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !!

ராகுகாலம் : 

காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

எமகண்டம் : 

காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

குளிகை :  

மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

சூலம் : கிழக்கு !

பரிகாரம் : தயிர் !!

கரணம் : 

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை !

நல்ல நேரம் : 

மதியம் : 

12-00 மணி முதல் 02-00 மணி வரை !

03-00 மணி முதல் 04-00 மணி வரை !

மாலை : 

06-00 மணி முதல் 09-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

புதன் ஓரை : 

காலை : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று

சுப முகூர்த்த நாள் !

இன்று

சோமன் வாரம் !

சுறுசுறுப்பான நாள் !!

இன்று

சிவ தரிசனம் செய்ய வேண்டிய நாள் !

அருகில் இருக்கும் 

திங்கள் ஸ்தலம் அல்லது நவக்கிரக திங்கள் பகவானை அர்ச்சனை செய்து வழிபடுதல் சிறப்பு !

சோம வார நாளாம் திங்கட்கிழமையில்...

சிவ தரிசனம் செய்வதுடன் ...

திங்கள் பகவானையும் சேர்த்து வழிபடுதல்...

சிந்தையில் தெளிவைத் தரும். . !

ஞானத்தையும் யோகத்தையும் வாரி வழங்கும்...!!

இன்று

மாலை விரதமிருந்து சிவ தரிசனம் செய்யவேண்டிய நாள் !!

சிவ அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..

சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. !! 

ஆத்மார்த்தம்..!

தேசியம்..!

தெய்வீகம்..! பேரின்பம் ...!!

Read next: திங்கள் ராசிகள்