சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலி

Jan 23, 2023 06:50 pm

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள பேடன்-வெஸ்ட் நெடுஞ்சாலையில் வெளியேறும் இடத்தில் A1 இல் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை 19 வயதான ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், கார கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16, 19, 43, 52 மற்றும் 53 வயதுடைய மற்ற ஐந்து பேர் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆர்காவ் வில் உள்ள கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டனர்.

Read next: உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போரிஸ் ஜான்சன்