உலகிலுள்ள முக்கிய அரச தலைவர்களின் உண்மைகளை அம்பலத்திற்கு கொண்டு வந்தது “பென்டோரா பேப்பர்ஸ்”

Oct 04, 2021 06:00 am

உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல், இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.

இவர்களின் நிதித் தொடர்பான இரகசிய தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களே கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரிலேயே இந்த இரகசிய ஆவணங்கள் கசிய விடப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மற்றும் முன்னாள் 35 அரசத் தலைவர்களின் பெயர்களும் இதில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 300ற்கும் அதிகமான முக்கிய நபர்களின் பெயர்களும் இவற்றில் அடங்குவதாக அறிய முடிகின்றது.

இவ்வாறு வெளியாகியுள்ள இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ்ஸில்  இலங்கை அரசியல்வாதி ஒருவரின் பெயரும் வெளியாகியுள்ளமை தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த அரச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராளபக்ஸவின் பெயரும் இந்த பென்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகியுள்ளது.

முழு அறிக்கையை காண அங்கே அழுத்தவும்.....


Read next: இலங்கை- இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: ஜி.எல்.பீரிஸ்!