என்றும் இளமையாக இருப்பதற்கான வழியை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் அறிவிப்பு

1 week

வயோதிபர்கள் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனிதர்கள் வயதாகும் செயற்பாடு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒக்ஸிஜன் சிகிச்சை வயோதிபர்களின் உடலில் அணுக்கட்டமைப்பின் மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் 25 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக ஆராய்;ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு தனித்துவமான ஆய்வானது உயிரியல் ரீதியிலான வயதாகும் செயற்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

மனிதர்களின் வயது அவர்களின் உடலில் மூலக்கூறுகள் குறைவடையும். குரோமோசோம்களில் உள்ள பாதுகாப்பு கவசங்கள் புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்க்கின்ஸன் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

ஸோம்பி அணு என அழைக்கப்படும் அணுக்கட்டமைப்பு சில நாட்களில் உடலில் உருவாகும் போது மீளுருவாக்கும் இயலுமையை தடுக்கின்றது.

வயது குறித்த செயல்முறையில் குறித்த பண்புகள் மோசமடைவதை தடுக்கும் முயற்சியாகவே ஹைப்பர்பெரிக் ஒக்ஸிஜன் சிகிச்சை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 35 வயதான இளம் வயதினரும் 64 வயோதிபர்களும் ஒக்ஸிஜன் பெறும் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டு முகக்கவசம் ஊடாக சுத்தமான ஒக்ஸிஜனை சுவாசிக்க செய்துள்ளனர்.

ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் தலா  90 நிமிடங்கள் வரை சென்றுள்ளதுடன் மூன்று மாதங்களில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெலிமியர்ஸ் 20 வீதமானவர்களிடத்தில் மீள அதிகரித்ததை காணக்ககூடியதாக இருந்துள்ளது.

இதன் போது இவர்களது சென்சென்ட் (ஸோம்பி) அணுக்கள் 37 வீதம் வரை குறைவடைந்தது.

இதன் போது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அவர்களது உடல்நிலையை போன்று ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வயதாகும் செயற்பாட்டை   புரிந்துக்கொள்வதற்காகவும் உயிர்வாழும் நாட்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க முடியும் என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது

Read next: வைத்திசாலையில் உள்ளவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்-உலக சுகாதார அமைப்பு