எங்களை காப்பாற்றுங்கள் எலான் மஸ்க்..! தப்பிக்க வேற வழியில்லை- உக்ரேனிய தளபதி

May 12, 2022 07:21 am

ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியுள்ள மீதமிருக்கும் உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்களின் கதி குறித்து கடுமையான எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரேனிய தளபதி ஒருவர் சிக்கிக் கொண்டார். அவர் அங்கிருந்து தப்பித்து செல்ல உதவிடுமாறு உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கை அணுகியுள்ளார்.


ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் அசோவ்ஸ்டல் ஸ்டீல் ஆலையில் சிக்கியவர்களை மீட்க உதவுவதற்காக எலான் மஸ்க்கை அவர் அணுகியுள்ளார்.


மரியுபோலில் சிக்கிக் கொண்ட உக்ரேனிய தளபதி கூறிடிருப்பதாவது, “சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்குமாறு நம்புவதற்கும், அதனை மக்களுக்கு கற்பிக்கவும்,  நீங்கள் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என மக்கள் கூறுகிறார்கள்.

Read next: ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!