சனிக்கிழமை வரலாற்றில் இன்று

May 14, 2022 05:12 am

14 மே 2022

1607 : ஜேம்ஸ்டவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

1610 : பிரான்ஸின் மன்னர் நான்காம் ஹென்றி கொல்லப்பட்டார். 

13 -ம் லூயி மன்னராக முடிசூடினார்.

1643 : 13-ம் லூயி இறக்க, அவரது நான்கு வயது மகன் பதினான்காம் லூயி பிரான்ஸின் மன்னரானார்.

1796 : பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.

1800 : அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாஷிங்டனுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.

1807 : ஸ்வீடனில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

1879 : 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.

1900 : கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் 

ஆரம்பமானது.

1911 : தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.

1939 : பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மதீனா உலகின் முதல், வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

1940 : இரண்டாம் உலகப்போர் :- ராட்டர்டேம் மீது ஜெர்மனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.

1943 : இரண்டாம் உலகப்போர் :- ஆஸ்திரேலியாவின் 

சென்டோர் என்ற மருத்துவக் கப்பல், குயின்ஸ்லாந்துக்கு  அருகில் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் உயிரிழந்தனர்.

1948 : இஸ்ரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி, தற்காலிக அரசையும் அறிவித்தது.

அரபு நாடுகள் இஸ்ரேலை தாக்கத் தொடங்கின.

இஸ்ரேல் போர் ஆரம்பமானது.

1965 : இலங்கையில் ரோகண விஜயவீர என்பவரால் மக்கள் விடுதலை முன்னணி எனும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1973 : ஸ்கைலாப் என்ற அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது 

1980 : எல் சல்வடோர் உள்நாட்டுப் போரில் ராணுவத்தினரால் 600 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1986 : தமிழ்நாட்டில் மேல்சபை ஒழிக்கப்பட்டது.

1987 : பிஜி தீவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது.

2004 : பிரேஸில், மனௌசில் விமானம் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 33 பேரும் உயிரிழந்தனர்.

Read next: 24 மணி நேரத்தில் 2,858 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.