அமித் ஷாவுக்கு சஞ்சய் ராவத் சவால்

May 14, 2022 12:01 pm

ஒரு நாடு, ஒரு அரசியல் சட்டம், ஒரு தேசிய சின்னம் என்பது போல இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி தேவை என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

ஒரு நாடு ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துங்கள்

சிவசேனா செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் நேற்று நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில்,

இந்தி மொழி திணிப்பு குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால்,

இந்தி பேசுபவர்கள் ஏன் தமிழ்நாட்டில் பானி பூரி விற்கிறார்கள் என பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத்,

எனது கட்சி எப்போதும் இந்திக்கு மதிப்பளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நான் இந்தியில் தான் பேசுகிறேன்.

காரணம் நான் பேசுவதை நாட்டு மக்கள் கேட்க வேண்டும். இந்தி மொழி தான் நாடு முழுவதும் ஏற்கப்பட்டு பேசப்படுகிறது. இந்தி நடிகர்களுக்கு உலக அரங்கில் மதிப்பு உள்ளது.

எனவே எந்த மொழியையும் நாம் அவமதிக்கக் கூடாது.

எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் ஒரு சாவல் தருகிறேன். ஒரு நாடு, ஒரு அரசியல் சட்டம்,

ஒரு தேசிய சின்னம் என்பது போல ஒரு தேசிய மொழி தேவை. எனவே இந்தியை தேசிய மொழியாக அமித் ஷா அறிவிக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

இந்தியாவில் அந்நிய மொழியான ஆங்கிலம் மொழிக்கு ஏற்பு கிடைத்துள்ளது. அதை விட, இந்தியா முழுவதற்குமான மொழியாக இந்தி இருக்க வேண்டும்.

வேறு பிராந்திய மொழிகள் இருப்பது சாத்தியமில்லை என மத்திய உள்துறை அமித் ஷா கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்தார்.

Read next: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா!