சாமி வந்து ஆடிய இஸ்லாமியர் - அனைத்து இன மக்களும் ஆசிபெற்றனர்

Jan 22, 2023 05:59 pm

தமிழகத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் போது  இஸ்லாமியர் ஒருவர் அருள் வந்து ஆடிய நிலையில், மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் அவரது காலில் தண்ணீர் ஊற்றி ஆசி பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஒரு தட்டு கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான கஸ்தூரி விழா கொண்டாடப்பட்டது. 

மத போதனைகளுக்காகக் குலோத்துங்க சோழன் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மஹான் சையது இஸ்மாயில் சிஷ்டி, சையத் மொய்தீன் சிஷ்டி ஆகிய இரு மதகுருமார்கள் நினைவாக 700 ஆண்டுகளாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக விழா நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில், குறித்த நிகழ்வு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி, சையது இப்ராஹிம் பாய் பரம்பரைப்படி சஞ்சீவி மலை அடிவாரத்தில் இருந்து புனித நீர் ஊரெங்கிலும் ஊர்வலமாக எடுத்து வரப்படும். இதன் போது  இஸ்லாமியர் ஒருவர் அருள் வந்து ஆடியுள்ளார். 

அப்போது மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் அவரது காலில் தண்ணீர் ஊற்றி ஆசி பெற்றனர். பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அனைத்து மதத்தினருக்கும் அன்னதானமாக அசைவ உணவு வழங்கப்பட்டது. 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்து வாழ்ந்த குடும்பத்தினர் இந்த கிராமத்திற்கு வந்து ஒன்று கூடி கஸ்தூரி விழாவைக் கொண்டாடியது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read next: மேற்குலக நாடுகளின் தீர்க்கமற்ற முடிவால் உக்ரைன் மக்கள் கொல்லப்படுகின்றனர் : மைக்கைலோ