164,080 பவுண்ட் சம்பளம் - ரிஷி சுனக்கிற்கு கிடைக்கவுள்ள சலுகைகள்

Oct 25, 2022 04:01 pm

பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பிரித்தானிய பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர், பிரித்தானிய மன்னரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படுகிறார். பொதுவாக, பொதுத் தேர்தலில் வெற்றி பெரும் கட்சியின் தலைவராக அவர் இருப்பார். 

அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் முடிவுகளுக்கும் பிரதமரே பொறுப்பாகும்.

பிரதமர், எந்த நேரத்திலும், அமைச்சர்களை பணியமர்த்தலாம் மற்றும் நீக்கலாம். அரசுத் துறைகளை நீக்கிவிட்டு, புதிய துறைகளை உருவாக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார். மன்னருடன் சேர்ந்து, பிரதமர் வரி மற்றும் செலவுக் கொள்கையின் பொறுப்பில் உள்ளார்.

தற்போது பிரித்தானிய பிரதமராகப் பதவி ஏற்கும் ரிஷி சுனக்கிற்கு தோராயமாக ஆண்டுக்கு  £164,080 பவுண்டு சம்பளமாக வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பிரதமராகப் பணியாற்றுவதற்கு சம்பளம் £79,936 பவுண்டு ஆகும். பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு கூடுதலாக £84,144 பவுண்டு ஆகும். இதன் கூட்டுத் தொகையே £164,080 பவுண்ட் ஆகும்.

பிரதம மந்திரி பாரம்பரியமாக லண்டனில் உள்ள 10, டௌனிங் (downing) தெருவில் உள்ள அரசு இல்லத்தில் வசித்தபடி பணிபுரிகிறார். இது 1735-ம் ஆண்டு  முதல் பிரதமரின் அலுவலகமாக உள்ளது. இருப்பினும், சமீபத்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்  11, டௌனிங் தெருவில் வசிக்கத் தேர்ந்தெடுத்திருந்தார். இதுவும் ஒரு பெரிய குடியிருப்பு பகுதியாகும். மேலும், பிரதமருக்கு பக்கிங்ஹாம்ஷையரில் செக்கர்ஸ் (chequers) என்ற அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. செக்கர்ஸ் 1921-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வருகிறது.

பிரதமருக்கு அரசு சார்பில் பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இதில் விமானம், ஹெலிகாப்டர், கார் உள்ளிட்டவையும் அடங்கும். பிரித்தானிய பிரதமர் ஜாகுவார் XJ LWB சென்டினல் (பெட்ரோல்) என்ற காரை பயன்படுத்துகிறார். 

வெளிநாடுகளுக்குச் செல்ல ரோயயல் விமானப்படையின் (விஐபி ஏர்பஸ் ஏ330 எம்ஆர்டிடி) விமானம் இயக்கப்படுகிறது. மேலும், ஏர்பஸ் A321neo பிரிட்டன் அரசாங்கத்தின் சார்பாக Titan Airways மூலம் இயக்கப்படுகிறது. 

No. 32 ஸ்க்வாட்ரான்  ZE700 என்ற சிறிய ரக விமானம், பிரிட்டனின் விமானப்படையான ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) மூலம் வழங்கப்படுகிறது. மேலும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW-109E ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுகிறது.b

Read next: ரிஷி சுனக் வெற்றி - பெருமிதம் கொள்ளும் சந்திரிகா