உடலில் விஷம்! விமானத்தில் சுருண்டு விழுந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்! அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

Aug 20, 2020 11:33 am

ரஷ்யாவின் எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவால்னி சைபீரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

44 வயதான நவால்னி வேலையை முடித்துக்கொண்டு சைபீரியாவிலிருந்து மாஸ்கோ -  டாம்ஸ்க்கு பயணத்துக்கொண்டு இருக்கும் போது திடீரென நோய்வாய்ப்பட்ட பின்னர் அவரது விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைபீரிய நகரமான ஓம்ஸ்கில் உள்ள முதல்தர அவசர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான நிலையில் உள்ளார் என டாஸ் மாநில செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதேவேளைஅலெக்ஸின் உடலில் நஞ்சு பரவியுள்ளது. அவர் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்என்று யர்மிஷ் ட்விட்டரில் குறிப்பிட்டார்.

இதன்போது சூடான திரவத்தின் மூலம் விஷம் விரைவாக உடலில் உறிஞ்சப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையயடுத்து அலெக்ஸி தனது தேநீரில் ஏதோவொரு விஷம் கலந்து குடித்ததாக நாங்கள் நினைக்கிறோம். காலையில் இருந்து அவர் குடித்த ரே சூடான பானம் தேனீர்தான் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அலெக்ஸின் தனது விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு டாம்ஸ்க் விமான நிலைய ஹோட்டலில் தேநீர் அருந்தியிருந்தார் என யர்மிஷ் கூறினார்.

அங்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்க சி.சி.டி.வி கேமராக்களை சோதனை செய்வதாக குறித்த கஃபே உரிமையாளர்களை மேற்கோளிட்டு இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அலெக்ஸ் விமானத்தில் திடீரென வியர்த்தது, பின்னர் அவர் கழிப்பறைக்குச் சென்று சுயநினைவை இழந்தார் என்று யர்மிஷ் எக்கோ (echo) மாஸ்க்வி வானொலி நிலையத்திடம் கூறினார்

அலெக்ஸி இன்னும் மயக்கத்தில் உள்ளார். அவர் வென்டிலேட்டரின் கீழ் வைக்கப்பட்டார். எங்கள் கோரிக்கையின் பேரில் பொலிசார் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டனர் என்று யர்மிஷ் கூறினார்.

மேலும் விமானத்தில் அவர் கழிப்பறைக்குச் சென்று திரும்பி வராத நிலையில் அவரது உடல்நிலை சரியில்லை என்று உணரத் தொடங்கியது.

அதிகாரிகள் அவரைச் சுற்றி வர போராடினார்கள், அவர் வலியால் கத்திக் கொண்டிருந்தார்.

 அலெக்ஸி நவல்னி ஓம்ஸ்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையும், அவரது உடல்நிலை தீவிரமாக இருப்பதை மருத்துவர்கள் மதிப்பிடுகிறார்கள் என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் ... அவரது நிலையை சீராக்க மருத்துவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். என்று ஓம்ஸ்கில் பிராந்திய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டட்யானா ஷாகிரோவா (Tatyana Shakirova) கூறினார்:

நச்சு பதிப்பு பரிசீலிக்கப்படும் பல பதிப்புகளில் ஒன்றாகும். காரணம் என்ன என்று இப்போது சொல்ல முடியாது என்று ஷாகிரோவா கூறினார்.

Read next: ப்ரெக்ஸிட் தொடர்பாக ஐ.ஒ., பிரித்தானியா இடையே பேச்சு வார்த்தை தொடக்கம்