புடினின் வாக்குறுதி காற்றில் பறந்தது.... இரும்பு ஆலையை தாக்க வரும் படை!

Apr 23, 2022 02:04 pm

ரஷ்யப் படைகள் மரியுபோல் இரும்பு ஆலையைத் தாக்க முயல்வதாக உக்ரைன் அதிகாரி கூறுகிறார்.

மரியுபோல் இரும்பு ஆலையில் சுமார் 1,000 பொதுமக்கள் வரை சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது, அவர்கள் வளாகத்திற்கு கீழே உள்ள வெடிகுண்டு முகாம்களில் வீரர்கள், கடற்படையினர் மற்றும் மருத்துவர்களுடன் அடைக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் ஜனாதிபதி ஆலோசகர், இப்போது ரஷ்யப் படைகள் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையைத் தாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், மீண்டும் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வியாழனன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்த இரும்பு ஆலை மீதான திட்டமிட்ட தாக்குதலை நிறுத்தினார். அதற்கு பதிலாக வளாகத்தை முற்றுகையிட படையினருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், உக்ரேனிய கடற்படை தளபதி செர்ஹி வோல்னி, 

பரந்து விரிந்து கிடக்கும் மரியுபோல் இரும்பு ஆலையில் உள்ள போராளிகள் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரித்தார்.

500க்கும் மேற்பட்ட போராளிகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் அவர் Sky News இடம் கூறினார்.


Read next: யாழ். வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!