தனிமைப்படுத்தலில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

Sep 14, 2021 10:32 am

தமது அலுவலக அதிகாரி ஒருவர் தொற்றுக்குள்ளானமையால் ரஷ்ய ஜனாதிபதி விலட்மிர் புட்டின் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட உள்ளார்.

தஜிகிஸ்தானில் பிராந்திய பாதுகாப்பு சந்திப்பில் புட்டின் கலந்துக்கொள்வதையும் பிற்போட்டுள்ளார்.

திங்களன்று நாட்டில் 18178 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 719 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ரஷ்யாவில் இதுவரை 7140070 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 192749 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read next: வேல்ஸ் - சுதந்திரமாக சுற்றித்திரியும் பிராணிகளை ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம்.