எதற்காக புட்டின் மரியபோல் இரும்பாலைக்குள் ரஷ்ய இராணுவத்தை அனுப்பவில்லை? ஒரு ஆய்வு

Apr 21, 2022 11:31 pm

ரஷ்யாவின் கணிப்பின் படி, மரியபோலில் உள்ள இரும்பாலையில் சுமார் சில ஆயிரம் உக்ரேனியன் படையினர் உள்ளனர். இந்த ஆலையானது சுமார் 11 சதுரான கிலோமீட்டர் அளவை கொண்டது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி வெளியிட்ட தகவலின் படி சுமார் 10000 பொதுமக்கள் அந்த ஆலையில் அகப்பட்டு உள்ளார்கள்.

அசோவாஸ்டால் இரும்பலையில் சுமார் 24 கிலோமீட்டர் நிலத்தடி சுரங்கப்பாதை உள்ளது. இதன் காரணமாக இதை பாதுகாத்துக்கொண்டு இருக்கும் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய வீரர்கள் உள்ளே நுழைந்தால் அவர்களை எதிர்த்து போரிடுவது இலகுவாக இருக்கும்.

ரஷ்ய தாக்குதல் ஆரம்பிக்க முன்னர் அந்த ஆலையில் பெரும் தொகையான தண்ணீர் மற்றும் உணவை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மிகப்பெரிய நிலத்தடி பாதைகள் இருப்பதால் அவர்கள் விரைவாக தாம் இருக்கும் இடத்தை மாற்றமுடியும்.

அசோவ்ஸ்டாலை தாக்குவது மிகவும் கடினம் மேலும், ரஷ்யா பெரும் தொகையான வீரர்களை இழக்க நேரிடும். மரியாபோல் முழுமையாக ரஷ்யாவின் கைகளில் போகாமல் ரஷ்யா தமது 10-12 எலைட் யூனிட்டை உக்ரைனின் கிழக்கில் உள்ள மற்றைய பகுதிகளில் நிறுத்த முடியாது.

இந்த நகரம் ரஷ்யாவை மற்றைய பகுதிகளில் தாக்குதல் நடத்துவதில் கவனம் செலுத்துவதை தடுக்கிறது.

ரஷ்ய அதிபர் புட்டின் அவர்கள் இன்று வியாழன் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பை மேற்கொள்ளும் பொழுது அசோவ்ஸ்டால் இரும்பு அலையை தவிர மரியாபோலின் மற்றைய பகுதிகளை பிடித்து விட்டதாக தெரிவித்து இருந்தார், மூன்று நான்கு நாட்களில் இரும்பாலையில் உள்ள உக்ரைன் இராணுவத்தினரை வெளியேற்ற போதும் என்று தெரிவித்தார். புட்டின் அவர்கள் இராணுவத்தை புகழும் வேளையில் இரும்பாலைக்குள் ரஷ்ய இராணுவத்தை நுழைவேண்டாம் என்று கட்டளை இட்டார். இவர் இவ்வாறு கட்டளை இட்டதன் மூலம் இரத்தவெள்ளத்தை தவிர்த்து மரியபோலின் வெற்றியை அறிவிக்கக்கூடியதாக இருந்தது. ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருள்கள் முடிவடையும் வேளையில் அவர்களாக சரணடைவார்கள் என்று புட்டின் கருதுவதாக தெரிகிறது. ஆனாலும் அந்த ஆலையில் குண்டு பொழிவதை நிறுத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

உக்ரைன் அதிபர் அவர்களின் ஆலோசகர் ஒருவர் பேசுகையில், புட்டின் அவர்களை கேலிசெய்வதுடன் இரும்பாலையை கைப்பற்றாமல் எவ்வாறு வெற்றியை அறிவித்தார் என்று கேள்வி எழுப்பினார்.

ரஷ்யாவின் இலக்கு தற்பொழுது கடினமாக இடங்களை பிடிப்பதை விடுத்து இலகுவாக பிடிக்க கூடிய இடங்களை கைப்பகற்றுவதோடு கடினமான இடங்களில் உக்ரைன் ராணுவத்தை சுற்றிவளைத்து வைத்திருப்பப்பது தான் போல் உள்ளது என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை உக்ரைன் இராணுவ அதிகாரி ஒருவர் வீடியோ காணொளிமூலம் தமக்கு சில மணி நேரமே உள்ளதாகவும் தகவலை வெளியிட்டு இருந்தார். இதற்கு காரணம் உண்மையான அவதியாக இருக்கலாம் அல்லது மேற்கத்திய நாடுகளில் இருந்து மேலதிக இராணுவ உதவியை பெறுவதற்காகன தந்திரமாக கூட இருக்கலாம்.

மற்றொரு பார்வையில், பூச்சாவில் இடம்பெற்றது போல் இங்கும் நடைபெற்றால் உலக அளவில் ரஷ்யாவுக்கு எதிராக பரப்புரையும் வெறுப்புகள் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளது அதேவேளையில் உக்ரைனுக்கான உதவி பெருகும். நடுநிலையில் உள்ள நாடுகள் அந்த நாடுகளில் உள்ள மக்களின் கருத்துக்கள் மாறும் பொழுது அரசாங்களும் ஆதரவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். புச்சாவில் நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகளுக்கு பின்னரே உக்ரைனுக்கு ஆதரவு பெருகியது என்பது இங்கு கவனிக்க தக்கது. 

இவ்வாறன பல காரணங்கலுக்காக்கவே புட்டின் இவர்கள் ரஷ்ய இராணுவத்தை இரும்பாலைக்குள் அனுப்பாமல் இருப்பதற்கு காரணமாகும், புச்சாவில் இடம்பெற்ற கொலைகளை இந்தியா போன்ற நாடுகளும் கண்டித்தது என்பம் இதுவரை ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்க தக்கது.

Read next: காஷ்மீரில் இரு லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை