ரஷ்யாவின் கோபத்தால் இருளில் மூழ்கப்போகும் பின்லாந்து!!

May 13, 2022 05:36 pm

நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பிலான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ரஷ்யா இந்த வார இறுதியில் பின்லாந்திற்கான மின்சார விநியோகத்தை நிறுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மே 14 முதல் மின்சார வழங்கலை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், என்று இன்டர் ராவ் வைத்திருக்கும் ரஷ்ய அரசின் எரிசக்தியின் துணை நிறுவனமான RAO நோர்டிக் கூறினார்.

இந்த நடவடிக்கை குறித்து ரஷ்யா அல்லது பின்லாந்தில் இருந்து உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் வராத நிலையில், அல்-ஜசீரா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 

இந்நிலையில் நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்துக்கு பின்லாந்து அதிபர் மற்றும் பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரஷ்யா,  “ரஷ்ய எல்லையை ஒட்டி நேட்டோ விரிவாக்கம் காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிபர் புதின் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். 

நேட்டோவில் பின்லாந்து சேருவதால் ரஷ்ய எல்லைக்கு அருகில் நேட்டோ எத்தகைய கட்டமைப்புகளை மேற்கொள்ளும் என்பதை பொறுத்தே ரஷ்யாவின் நடவடிக்கை இருக்கும்” என்று எச்சரித்திருந்த நிலையில், ரஷ்யா இந்த வார இறுதியில் ஃபின்லாந்திற்கான மின்சார விநியோகத்தை நிறுத்தும் என்று செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read next: இலங்கையில் போராட்டம் நீடிக்கும் நிலையில் இம்மாத இறுதியில் ரணில் இந்தியா வருகை?