நேட்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஷ்யா

Aug 08, 2022 04:14 pm

உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பால் வழங்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்ய படையினர் அழித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

45,000 டன் வெடி மருந்தை ஏவுகணை வீசி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மிகோலைவ் நகரில் உள்ள அந்த ஆயுத கிடங்கு மற்றும் டோனட்ஸ்க் பகுதிகளில் உள்ள உக்ரைன் நிலைகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தின.

போர் ஆரம்பித்தது முதல், உக்ரைன் படைகளுக்குச் சொந்தமான 263 போர் விமானங்கள், 4,000 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், 3,000 க்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கிகளை தகர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read next: இலங்கையில் அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!