நூற்றாண்டின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

3 months

ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட விருது வழங்கும் விழாவில் நூற்றாண்டின் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த பிரிவிற்காக லயனல் மெஸி மொஹமட் சலர் மற்றும் ரொனால்டினோ ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை 35 வயதுடைய போர்த்துக்கல் வீரர் தனது சக பிரஜையும் முகவருமான ஜோர்ஜ் மென்டஸ் சார்பாக நூற்றாண்டின் முகவர் என்ற விருதை பெற்றுள்ளார்.

வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதை  பாயேர்ன் முனிச் வீரரான ரொபர்ட் லெவன்டொவ்ஸ்க்  பெற்றுள்ளார்.

வருடத்தின் சிறந்த கால்பந்தாட்ட கழகமாக பயேர்ன் முனிச்சும் வருடத்தின் சிறந்த பயற்றுவிப்பாளராக ஹன்ஸி பிளிக்கும் பெற்றுக்கொண்டனர்.

நூற்றாண்டின் கழகமாக ரியல் மெட்ரிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட கழகத்தின் தலைவர் கியானி இன்பென்டினோ விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டிருந்ததுடன் வெற்றியார்களுக்கு விருகளை வழங்கியுள்ளார்.

Read next: கேம் ஒப் த்ரோனை உருவாக்கியவர் விஷமிட்டு கொலை?