யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ

Jun 18, 2021 03:54 am

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வென்றது.

புடாபெஸ்ட் நகரில் நேற்றுமுன்தினம் அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் போர்த்துக்கல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்த்துக்கல் அணி 3-–0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை பதம் பார்த்தது.

இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், போர்த்துக்கல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது


Read next: இலங்கையில் பூனை, நாய்களிடமிருந்து சிறுவர்களுக்கு தொற்றும் புதிய ஆபத்தான நோய்!