ரொனால்டோவிற்கு 60,000 டொலர் அபராதம் - 2 ஆட்டத்தில் விளையாடத் தடை

Nov 24, 2022 03:51 am

காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு  (Cristiano Ronaldo) 60,000 டொலர் அபராதமும் இரண்டு ஆட்டத்தில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

Everton அணி ரசிகரின் கையில் இருந்த தொலைபேசியைத் தட்டிவிட்டதற்காகக் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி Manchester United அணியும் Everton அணியும் பொருதியபோது நடந்தது.

அதில் 0-1 என்ற கோல் கணக்கில் Manchester United அணி தோல்வி அடைந்தது.

அப்போது ரொனால்டோ 14 வயதுச் சிறுவனின் கையில் இருந்த தொலைபேசியைத் தட்டிவிட்டார்.

அந்தச் செயலுக்கு அவ்வட்டார பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தற்போது சுயேச்சைக் குழு ஒன்று தற்காலிகத் தடையும் அபராதமும் விதித்துள்ளது.

ரொனால்டோ எந்த நாட்டில் புதிய குழுவில் சேர்ந்தாலும் அந்தத் தடை பொருந்தும். ஆனால் கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கு அது பொருந்தாது.

தற்போது ரொனால்டோ எந்தக் குழுவிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read next: இலங்கை உட்பட உலக நாடுகளில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி