கொவிட் தொற்றினைத் தொடர்ந்து கணக்கீட்டை சமப்படுத்துவதற்கு வசந்தகாலத்தில் வரிகள் அதிகரிக்கப்படும் என சுனக் தெரிவிப்பு

5 months

கொரோனா தொற்றினைத் தொடர்ந்து வசந்தகாலத்தில் வரிகள் அதிகரிக்கப்படும் என பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தொகையை சமன் செய்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால உட்கட்டமைப்பு முதலீட்டிற்காக 100 பில்லியன் பவுண்ஸ்களும் தேசிய சுகாதார சேவைகளுக்கு புதிய செலவீனங்களுக்காக 3 பில்லியன் பவுண்ஸ்களும் ஒதுக்குவதற்கு ரிஷி சுனக் திட்டமிடப்பட்டுள்ளார்.

பிரித்தானிய மக்கள் பொருளாதார அதிர்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் அதனை எந்த வகையிலேனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

நெருக்கடியைத் தொடர்ந்து சில செலவு குறைப்பு மற்றும் வரி அதிகரிப்பு போன்றன எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக தாமதமடைந்த பரிசோதனைகள் ஸ்கேன்கள்  போன்ற மருத்துவ செயற்பாகளுக்காக தேசிய சுகாதார சேவைகள் 1 பில்லியன் பவுண்ஸ்களை பெற்றுக்கொள்ளும் என திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

1.5 பில்லியன் பவுண்ஸ்கள் நிலவும் சுகாதார நெருக்கடிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் 500 மில்லியன் பவுண்ஸ்கள் உளநல சேவைக்கு பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில்லரை வியாபாரிகளுக்கு மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை சுனக் ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் முதல் வசந்த காலம் வரை அவர்களுக்கு உதவுவதற்கும் அவர் யோசனையை முன்வைத்துள்ளார்.

Read next: பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் காலத்தில் குடும்பங்கள் ஒன்றுகூடுவது தொடர்பாக அமைச்சர்கள் இணக்கம்