பிரித்தானியாவில் முதல் ஆசிய பிரதமராகினார் ரிஷி சுனக்

Oct 24, 2022 02:14 pm

பிரித்தானி பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரித்தானியாவில் பிரதமர் பதவி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. அதற்கமைய, ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த ஆண்டின் முதல் டோரி தலைமைப் போட்டியில் லிஸ் ட்ரஸ்ஸிடம் தோற்று ஏழு வாரங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் இதில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக்கொண்டதை அடுத்து ரிஷி சுனாக் 147 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முன்னணியில் இருந்தார்.

அவர் பிரித்தானியாவின் முதல் ஆசியப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். மேலும் பிரித்தானியாவின் மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.Read next: 48 இலங்கை அகதிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுகள்!