புதிய அவசரநிலையை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலியா! வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல்

May 13, 2022 02:09 pm

குயின்ஸ்லாந்து பாரிய வெள்ளப்பெருக்கு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிக் கிழமையன்று பல பிராந்தியங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் மாநிலத்தின் வடக்கில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த புயல் இப்போது பிரிஸ்பேன் உள்ளிட்ட குயின்ஸ்லாந்தின் அதிக மக்கள்தொகை கொண்ட தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை பல ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகரின் வடக்கே உள்ள ஜிம்பியில் வசிப்பவர்கள், சமீபத்திய மாதங்களில் இரண்டாவது முறையாக வெள்ளத்தை எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கப்பட்டனர்.

இது குறித்து, மேயர் க்ளென் ஹார்ட்விக் கூறுகையில், இந்த முறை உள்ளூர் மேரி நதி எவ்வளவு உயரத்தில் உயரும் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளோம். இது 15 மீட்டர் உச்சத்தை எட்டினால்,  வீடுகள் பாதிக்கப்படாது. 

வெள்ளிக்கிழமை கிரந்தம் நகரில் எச்சரிக்கை சைரன் ஒலித்தது, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

மேலும் கனமழை பெய்வதால் உயிருக்கு ஆபத்தான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


Read next: மஹிந்தவின் பாதுகாப்பிற்காக திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்