கொரோனா சீனாவில் முதலில் ஆரம்பிக்கவிலையை என்ற கருத்துக்கு இத்தாலிய ஆராச்சியாளர்கள் பதில்

2 weeks

இத்தாலியில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வைரஸின் ஆரம்பம் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தவில்லைஆய்வாளர்கள்

959 ஆரோக்கியமான தன்னார்வளர்கள் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்இந்த பரிசோதனை செப்டெம்பர் 2019 முதல் 2020 மார்ச் வரை நடத்தப்பட்டதுடன் இவர்களிடத்தில் நோய்எதிர்ப்புபொருட்கள் அதிகளவில் விருத்தியடைந்துள்ளதை இத்தாலிய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

வைரஸ் எப்போது எங்கு உருவானது என்ற கேள்வி தொடர்கின்ற நிலையில் இந்த ஆய்வுகள் சரியானவை எனில் தொற்றின் ஆரம்ப வரலாற்றை இது மாற்றக்கூடும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நொவெல் கொரோனா வைரஸ் மத்திய சீனாவின் வுஹானில் டிசம்பர் மாதம் முதலில் அடையாளம் காணப்பட்டது. இத்தாலியின் முதலாவது கொவிட் நோயாளர் பெப்ரவரி 21ஆம் திகதி மிலான் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொடரும் வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் பல நாடுகளின் பங்களிப்பு இருக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தும் என  நம்புவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் இது அவசியமான முடிவு அல்ல என இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக ஆய்வுகளுக்கு அழைப்பு விடுத்த சில விஞ்ஞானிகளிடத்தில் சந்தேகத்தை இது தூண்டியுள்ளது.

நோய்எதிர்ப்பு பொருட்கள் புரதத்தின் ஒரு பகுதியான ரிசெப்டர் பைண்டிங் டொமெய்னினால் ( receptor binding domain (RBD) )இலக்கு வைக்கப்படுவதாக பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆய்வின் இணை ஆராய்ச்சியாளர் சியன்னா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இமானுவேல் மொன்டோ மொலி குறிப்பிட்டுள்ளார்.

Read next: டொரெண்டோவின் பீல் மற்றும் யோர்க் ஆகிய பகுதிகளில் புதிய இறுக்கமான கட்டுப்பாடுகள்?